காரைக்காலில் ... கொட்டும் மழையில்..... மனிதநேய மக்கள் கட்சி ..... கண்டன ஆர்ப்பாட்டம் .....
நாட்டில் நடைபெறும் காட்டுமிராண்டிதனத்தை ஊக்குவிக்கும் மத்திய பிஜேபி அரசை கண்டித்தும் .....
புதுச்சேரி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் .....
காரைக்காலில் ... கொட்டும் மழையில்
மனிதநேய மக்கள் கட்சி
கண்டன ஆர்ப்பாட்டம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மத்தியில் பிஜேபி அரசு பதவியேற்றதிலிருந்து நாட்டில் பல்வேறு காட்டுமிராண்டித்தனமான செயல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன, உத்தரபிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக குற்றம் சாட்டி முதியவர் படுகொலை, தலித் சிறுவர்கள் எரித்துகொலை, ஊடகவியாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் என பல்வேறு காட்டுமிராண்டித்தனமான செயல்கள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் பிரதமர் இச்செயல்களை கண்டிக்காமல் காட்டுமிராண்டித்தனத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுவதை கண்டித்தும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையின் அவல நிலையை கண்டித்தும், மருத்துவனமனையை தரம் உயர்த்த கோரியும், மின் கட்டண உயர்வை கண்டித்தும், மின் துறையின் அவல நிலையை கண்டித்தும், குப்பை மேடாகவும், சாக்கடைகளை வழிக்காமல் உள்ளதால் டெங்கு போன்ற நோய்கள் பரவி வருகின்றன, இதுபோன்று மக்கள் நல பணிகளை கவனிக்காமல் உள்ள நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளின் அவல நிலையை கண்டித்தும்,
காரைக்கால் நகர மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நகர செயலாளர் முஹம்மது சர்புதீன் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஹாஜா நஜ்முதீன், மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் நியாஜ் அஹமது, மாவட்ட வணிகர் சங்க செயலாளர் அன்வர் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுஷா, மாவட்ட செயலாளர் நெய்னா முஹம்மது, தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட பொருளாளர் ராஜா முஹம்மது, மாவட்ட துணை செயலாளர்கள் ஷாஜஹான், சாதிக் அலி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். முடிவில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அக்பர்ஷா நன்றியுரை நிகழ்த்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் தெற்கு தொகுதி செயலாளர் முஹம்மது இக்பால், வடக்கு தொகுதி செயலாளர் முஹம்மது இப்ராஹிம், நெடுங்காடு தொகுதி செயலாளர் ஹாஜா மெய்தீன், மாவட்ட வணிகர் சங்க பொருளாளர் அப்துல் நாசர், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் முஹம்மது மாசிம், நகர பொருளாளர் முஹம்மது யாசின், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மெய்தீன், யூசுப்கான், சதாம் ஹுசைன், முஹம்மது ஜெக்கரியா, நகர நிர்வாக குழு உறுப்பினர்கள் ஜெகபர் சாதிக், கமால் ஹுசைன், நகர செயற்குழு உறுப்பினர் செய்யது புஹாரி, சாகுல் ஹமீது, சபுருதீன், நகர துணை துணை செயலாளர் சம்சுதீன், எம்.ஜி.ஆர் கிளை செயலாளர் முஹம்மது யூசுப், கிழக்கு கிளை செயலளர் சாகுல் ஹமீது, கிளை நிர்வாகிகள் புதுத்துறை முஹம்மது யூசுப், திருபட்டினம் ஹாஜா ஜெகபர் சாதிக், யாசிர், அம்பகரத்தூர் முஹம்மது அன்ஹருதீன், ஜியாவுதீன், முஹம்மது பாசில் உட்பட ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.












