போக்குவரத்து நெறிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மனிதநேய மக்கள் கட்சி
மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட பொருளாளர் அ.ராஜா முஹம்மது தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் காரைக்கால் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் லெனின் பாரதி மற்றும் திரு.பட்டினம் போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் முத்துச்சாமி ஆகியோரை நேரில் சந்தித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது "காரைக்கால், காமராஜ் சாலை மற்றும் ஓரு வழிப்பாதையாக உள்ள சாலைகளில் தடை செய்யப்பட்ட வாகனங்கள் கட்டுப்பாடின்றி இரு புறமும் சென்று வருவதால் வாகன ஓட்டிகளும், மாணவ, மாணவிகளும் மற்றும் பொதுமக்களும் பெரும் அவதிப்படுவதுடன், வேகமாக செல்வதால் விபத்தும் ஏற்படுகின்றன. எனவே, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட ஓரு வழிப்பாதையை சரிவர பயன்படுத்த வாகன ஓட்டிகளுக்கும் , பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். மேலும் முக்கிய சாலையான பாரதியார் வீதி விரிவுப்படுத்தப்பட்டு ஓரு மாதங்கள் ஆகியும் இன்னும் சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு அடையாள கோடுகளோ, இரவு நேரங்களில் விபத்தை தடுக்க மின்னொளியுடன் கூடிய ஸ்டிக்கர்களோ ஓட்டப்படாமல் உள்ளதால், உடனடியாக சாலை ஓரங்களில் அடையாள கோடுகள் மற்றும் மின்னோளியுடன் கூடிய ஸ்டிக்கர் ஓட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தப்பட்டது.
பின்னர் நிர்வாகிகளிடம் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து காவல் ஆய்வாளர் உறுதியளித்தார். இச்சந்திப்பின்போது மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் ஷாஜஹான், தமுமுக மாவட்ட துணை செயலாளர் மெய்தீன், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் யூசுப்கான், தமுமுக நகர பொருளாளர் கமால் ஹுசைன், நகர துணை செயலாளர் செய்யது புஹாரி , அம்பகரத்தூர் கிளை பொருளாளர் பாசில் , நகர முன்னால் செயலாளர் சிக்கந்தர், ஷேக் அலாவுதீன் ஆகியோர் உடனிருந்தனர்....