அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Friday, April 8, 2016

புதுச்சேரி மாநில காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகளை மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு

புதுச்சேரி மாநில காங்கிரஸ் மற்றும் திமுக  நிர்வாகிகளை மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு

 மே 16 அன்று நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கூட்டணியின் தொடர்ச்சியாக புதுச்சேரி மாநிலத்திலும் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இணைந்து செயல்படுவது என மனிதநேய மக்கள் கட்சி முடிவெடுத்துள்ளது. அதனை தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களிடம் தொகுதி பங்கீடு மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் அப்துல் சமது அவர்களின் உத்தரவின் பேரிலும், தலைமை நிர்வாக குழு உறுப்பினர் அலாவுதீன் ஆலோசனையின் அடிப்படையிலும் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் கட்சியின் தேர்தல் அமைப்பு குழு தலைவர் மாநில அமைப்பு செயலாளர் I.M.பாதுஷா தலைமையில் சென்ற குழுவினர் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் எ.நமச்சிவாயம், புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர்கள் எஸ்.பி.சிவகுமார், சிவா ஆகியோர்களை சந்தித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சந்திப்பின்போது காரைக்கால் மாவட்ட செயலாளர் நெய்னா முஹம்மது, புதுச்சேரி மாவட்ட செயலாளர் பஷீர் அஹமது, காரைக்கால் மாவட்ட தமுமுக செயலாளர் அப்துல் ரஹீம், புதுச்சேரி மாவட்ட தமுமுக செயலாளர் சாஹுல் ஹமீது, காரைக்கால் மாவட்ட பொருளாளர் ராஜா முஹம்மது, காரை மாவட்ட துணை செயலாளர் ஷாஜஹான் ஆகியோர் உடனிருந்தனர்.

அன்புடன்
எம்.நைனா முஹம்மது,
மாவட்ட செயலாளர் - மமக

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP