அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Saturday, May 21, 2016

புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி

புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில செயலாளர் எம்.எஸ்.அலாவுதீன் வெளியிடும் அறிக்கை

நடைபெற்று முடிந்துள்ள புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலில் சிறப்பான கூட்டணியை அமைத்து அதனை சீரிய முறையில வழிநடத்திய காங்கிரஸ் மற்றும் திமுக தலைமைக்கும் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்து மிக பெரிய அளவில் வெற்றியை தேடித்தந்த புதுச்சேரி மாநில அனைத்து நல்லுள்ளங்களுக்கும் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில்  நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள காங்கிரஸ் கட்சி தலைமைக்கு தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக  வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றவும், சிறப்பான முறையில் மக்கள் நலப்பணிகளை நிறைவேற்றவும் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக உறுதுணையாக இருக்கும் என்பதையும் தெரிவித்து  கொள்கிறோம்.

(ஒப்பம்) எம்.எஸ்.அலாவுதீன்

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP