அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Saturday, May 28, 2016

புதுச்சேரி முதல்வருக்கு தமுமுக வாழ்த்து

புதுச்சேரி முதல்வருக்கு தமுமுக வாழ்த்து

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில செயலாளர் எம்.எஸ்.அலாவுதீன் வெளியிடும் அறிக்கை

புதுச்சேரி முதல்வராக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள நாராயணசாமி அவர்களுக்கு தமுமுக தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. 

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி மின் கட்டணத்தை 50 சதவிகிதமாக குறைத்திடவும், அரசு பள்ளிகளில் படித்த பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சென்டாக் மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை வழங்கிடவும், சென்டாக் அரசு ஒதுக்கீட்டை 50% சட்டப்பூர்வமாக மாணவர்களுக்கு பெற்றுத்தந்திடவும், தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை முறைப்படுத்தவும், அரசு பொது மருத்துவமனைகளை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்திடவும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்திடவும்,
இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை 4 சதவிகிதமாக உயர்த்திவும், வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும், மத்திய அரசு வழங்கும் அனைத்து சலுகைகளும் காலதாமதமின்றி புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கும் கிடைத்திடவும் மற்றும் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அனைத்து திட்டங்களையும் படிப்படியாக நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கேட்டு கொள்கிறோம்.


(ஒப்பம்) எம்.எஸ்.அலாவுதீன்



Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP