அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Wednesday, June 1, 2016

பதினொன்றாம் வகுப்பு மாணவர்களை அலைக்கழிக்கும் வருவாய் துறை

பதினொன்றாம் வகுப்பு மாணவர்களை அலைக்கழிக்கும் வருவாய் துறை
 காரைக்கால் மாவட்ட ஆட்சியர் தலையிட மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

மனிதநேய மக்கள் கட்சி காரைக்கால் மாவட்ட செயலாளர் நெய்னா முஹம்மது வெளியிடும் பத்திரிக்கை செய்தி :

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு SSLC படிக்கும்போது அவர்களுடைய தேசம், குடியுரிமை, வருமானம், ஜாதி ஆகிய நான்கு வகைகளையும் உள்ளடக்கிய (PIC) ஒருங்கிணைந்த சான்றிதழ்களை வழங்குவதற்காக, பள்ளிக்கூடத்திற்கே மனுவை அனுப்பி அதனை மாணவ, மாணவிகள் பூர்த்தி செய்து, மாணவர்களின் புகைப்படங்களையும் எடுத்து, பள்ளிக்கூடத்தின் மூலம் வருவாய் துறைக்கு அனுப்பப்பட்டு, அதனை வருவாய் துறையினர் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடத்தின் மூலம் மாணவ, மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

அதுபோல், கடந்த வருடமும் காரைக்கால் பகுதியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் ஒருங்கிணைந்த சான்றிதழ் மனு அனுப்பப்பட்டு, அந்த மனுக்களை மாணவ, மாணவிகள் பூர்த்தி செய்து தேவையான ஆதாரங்களுடன் கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர் மற்றும் துணை தாசில்தார் ஆகியோர்களிடம் கையெழுத்து பெற்று மனு பூர்த்தியடைந்த நிலையில் பள்ளிக்கூடத்தில் சமர்பித்து, பள்ளிக்கூடத்தின் வாயிலாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சான்றிதழ் பெறுவதற்காக காரைக்கால் வருவாய் துறையில் சமர்பித்து விட்டனர். 

அப்படி பூர்த்தியடைந்த நிலையில் பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய (PIC) ஒருங்கிணைந்த சான்றிதழ்களை அனைத்து மாணவர்களுக்கும் வழங்காமல் 5 முதல் 10 சதவிகித மாணவர்களுக்கு மட்டுமே வருவாய்த்துறை வழங்கி விட்டு மீதமுள்ள மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கும், வருவாய் துறைக்கும் அலைந்து வருகின்றனர். காரைக்கால் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பில் சேர மனுக்கள் கொடுக்க கடைசி தேதி 3.6.2016 என கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால், 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் PIC வாங்காததால் பதினொன்றாம் சேர்க்கை மனுக்களை கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஆகவே, இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சியர் முழுமையாக தலையிட்டு பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை விஷயத்தில் முறையான உத்தரவிட்டு மன உளைச்சலில் தவிக்கும் மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்துமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.




Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP