அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Sunday, July 3, 2016

தமுமுக வின் ரம்ஜான் பெருநாள் வாழ்த்து

சமூக ஒற்றுமை ஓங்கிட சபதமேற்போம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக கழக புதுச்சேரி மாநில செயலாளர் எம்.எஸ்.அலாவுதீன் வெளியிடும் பெருநாள் வாழ்த்து செய்தி

இன்பத்தை உலகெங்கும் பின்பற்றசெய்து அதனை அறியச் செய்யும் மகிழ்ச்சியான ஈகைத் திருநாளாம் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இல்லாமையை வேரோடு அகற்றிட சூளுரைப்போம். மனித சமூகத்தை அச்சுறுத்தும் வறுமை, பஞ்சம், பட்டினி, வேலையின்மை போன்றவைகள் ஒழியவும். உழைப்பை சுரண்டும் கயவர்கள், இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் கயமைத்தனம், லஞ்சம் லாவண்யம் உள்ளிட்ட தீமைகளை ஒழித்து இல்லாமையை வேரோடு சாய்க்க உறுதி ஏற்போம்.

அதேபோல், மானிட சமூகத்தின் மாண்பைக் கெடுக்கும் கல்லாமை என்னும் கொடுமை, கற்றிருந்தும் அறிவுப்பார்வை இன்றி கருத்து குருடர்களாய் மூட வழக்கங்களுக்கு புத்துயிர் கொடுக்கும் அவல நிலை அறவே மாற்றப்பட உறுதி பூணுவோம். இந்திய நாட்டின் இறையாண்மை தனித்தன்மை போன்றவை இன்று கேள்விக்குரிய ஒன்றாக மாறிவிட்டது. சமூக நல்லிணக்கம், சகிப்புத்தன்மை போன்ற வேற்றுமையில் ஒற்றுமை காணும் மக்களை பிளவுப்படுத்தத் தூண்டும் தீய சக்திகளிடமிருந்து நாட்டையும், வீட்டையும் காக்க உறுதி ஏற்போம்.

நாம் வாழும் நாட்டில் அமைதியும், சுபிட்சமும், சமூக நல்லிணக்கம் நிலவிடவும், சகோதரத்துவம் மேலோங்கிடவும் நாம் இத்திருநாளில் சபதமேற்போம். சகோதர சகோதரிகள் அனைவர்களுக்கும் எனது இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

ஒப்பம் 

எம்.எஸ்.அலாவுதீன்.

மாநில செயலாளர் - தமுமுக 



Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP