அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Monday, December 12, 2016

காரைக்காலில்... தமுமுக வின் 131 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி

அனைத்து சமூக மக்களுக்காக தமுமுக வின் 131 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியும், பொது சிவில் சட்டத்தை முஸ்லிம்கள் எதிர்ப்பது ஏன்? என்ற தலைப்பில் கருத்தரங்கமும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக காரைக்கால் டணால் தங்கவேலு கலையரங்கத்தில் (19.11.2016) நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம் தலைமை வகித்தார், தமுமுக தலைவர் J.S. ரிபாய், மாநில செயலாளர் பேராசிரியர் ஹாஜா கனி, மாநில செயலாளர் அலாவுதீன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர்கள் மாயவரம் அமீன், தஞ்சை பாதுஷா, மமக மாவட்ட செயலாளர் ஷாஜஹான்,  மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது யூசுப் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள், புதுச்சேரி மின் திறல் குழும தலைவி கீதா ஆனந்தன், சட்டமன்ற உறுப்பினர் K.A.U.அசனா ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
முன்னதாக மாவட்ட பொருளாளர் ஹாஜா நஜிமுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார், மமக மாவட்ட பொருளாளர் ராஜா முஹம்மது, மாவட்ட  துணை செயலாளர்கள் அப்துல் காசிம், முஹம்மது மெய்தீன், யூசுப்கான், மமக மாவட்ட துணை செயலாளர்கள் சாதிக் அலி, ஹாஜா மெய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் நகர செயலாளர் கமால் ஹுசைன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர துணை செயலாளர் செய்யது புஹாரி, மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முஹம்மது பயாஸ், மாவட்ட  மாணவரணி செயலாளர் சதாம் ஹுசைன், கிளை துணை செயலாளர்கள் ஹமீது மரைக்கார், அஷ்ரப் அலி, நகர துணை செயலாளர் முஹம்மது ஜாஹிதீன், மமக மாவட்ட இளைஞரணி செயலாளர் முஹம்மது சர்புதீன், மமக தெற்கு தொகுதி செயலாளர் இக்பால், மமக நெடுங்காடு தொகுதி செயலாளர் ஹாஜா மெய்தீன், நகர பொருளாளர் சிக்கந்தர் புதுத்துறை கிளை செயலாளர் முஹம்மது யூசுப், மமக நகர செயலாளர் முஹம்மது மாசிம், முன்னாள் மாவட்ட மாணவர் அணி செயலாளர் நியாஜ் அஹமது, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முஹம்மது ரியாஸ், மமக நகர துணை செயலாளர் முத்து உட்பட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.




Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP