அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Monday, December 12, 2016

காரைக்காலில் .... தமுமுக வின் சிறந்த சமூக சேவகர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி




காரைக்கால் நகர தமுமுக சார்பாக சிறந்த சமூக சேவர்களுக்கான விருது (19.11.2016) வழங்கும் நிகழ்ச்சி நகர செயலாளர் கமால் ஹுசைன் தலைமையில் நடைபெற்றது, மமக மாவட்ட செயலாளர் ஷாஜஹான், மாவட்ட பொருளாளர் ஹாஜா நஜிமுதீன், மமக மாவட்ட பொருளாளர் ராஜா முஹம்மது, மாவட்ட  துணை செயலாளர்கள் அப்துல் காசிம், முஹம்மது மெய்தீன், யூசுப்கான், மமக மாவட்ட துணை செயலாளர்கள் சாதிக் அலி, ஹாஜா மெய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தமுமுக தலைவர் J.S. ரிபாய், மாநில செயலாளர் பேராசிரியர் ஹாஜா கனி, மாநில செயலாளர் அலாவுதீன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர்கள் மாயவரம் அமீன், தஞ்சை பாதுஷா,
மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டனர். தமுமுக அம்புலன்ஸ் ஓட்டுநர் செய்யது புஹாரி, காரைக்கால் அரசு பொது மருத்துவமனை இரத்த வங்கி ஊழியர் தர்மராஜ், காரைக்கால் அரசு பொது மருத்துவமனைசவக்கிடங்கு ஊழியர் செந்தில் முருகன், காரைக்கால் அரசு பொது மருத்துவமனை சவக்கிடங்கு ஊழியர் அருள்செல்வம், சமூக சேவகர் முருகானந்தம், காரைக்கால் பெரியப்பள்ளிவாசல் மோதினாரும், மைய்யத் குளிப்பாட்டும் செய்யது முஹம்மது அலி, சமூக சேவகர் முஹம்மது அலி மரைக்காயர் என்ற ஜின்னா, மெய்தீன் பள்ளிவாசல் மோதினாரும், அடக்கஸ்தல குழி வெட்டும் ஜெகபர் சாதிக் என்ற ரிபாய், அடக்கஸ்தல குழி வெட்டும்  அப்துல் காதர், பெண்கள் மைய்யத் குளிப்பாட்டும் பாத்திமா கனி  ஆகியோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

சிறந்த சமூக சேவகர்களுக்கான விருதுகளை தமுமுக தலைவர் ரிபாயி, தமுமுக மாநில செயலாளர் பேராசிரியர் ஹாஜா கனி, காரைக்கால் முத்தவல்லிகள் நிர்வாக சபை தலைவர் முஹம்மது அபூபக்கர், காரைக்கால் முத்தவல்லிகள் நிர்வாக சபை செயலாளர் அப்துல் ரஹ்மான் என்ற செல்லப்பா, காரைக்கால் முஸ்லிம் ஜமாத் தலைவர் முஹம்மது யாசின், அஞ்சுமன் இஸ்லாமிய சங்க தலைவர் ஆடிட்டர் சாகுல் ஹமீது, சௌதா தங்க மாளிகை உரிமையாளர் அப்துல் காதர் என்ற சின்னத்தம்பி, விநாயக மிஷன் மருத்துவமனை மருத்துவர் செய்யது மஹ்ரூப் ஷாஹிப், FACEAT & P துணை தலைவர் செய்யது சாஹிர், நேரு நகர் ஜமாத் தலைவர் அப்துல் ரஜாக் ஆகியோர் வழங்கினார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP