புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த துடிக்கும் மத்திய அரசை கண்டித்து காரைக்காலில் ... மனிதநேய மக்கள் கட்சி .... கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை, தேசியக் கல்விக்
கொள்கையை உருவாக்கத் திட்டமிட்டு அதற்காக சில விவாதத் தலைப்புகளை 2015
ஜனவரியில் வெளியிட்டது. நாடு முழுவதும் 2.75 லட்சம் கருத்தறியும்
கூட்டங்கள் நடத்தப்பட்டதாகவும், வலைதளம் மூலம் 29 ஆயிரத்துக்கும்
அதிகமானவர்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்ட தாகவும், அதைத் தொகுத்து
அறிக்கை தருவதற்கு ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும் அந்த அமைச்சகம்
தெரிவித்துள்ளது. முன்னாள் ஐஏஸ் அதிகாரி டிஎஸ்ஆர் சுப்ரமணியம்
தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் 43 பக்கங்கள் மனிதவள
மேம்பாட்டு துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்தப் புதிய கல்விக் கொள்கை காவிமயமானதாகவே
உள்ளது. இந்தப் புதிய கல்விக் கொள்கை சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின்
இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அவற்றின் உரிமைகளைப் பறிக்கும்
வகையில் அமைக்கப் பட்டுள்ளது. மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் இது
அமைக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருத்த்தை அனைத்து நிலையிலும் கட்டாயமாக்குவதும்
இதன் நோக்கமாகும். ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பாசிச சங்பரிவார சக்திகள்
முன்னேடுக்கும் ‘ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே கல்வி, ஒரே பண்பாடு’ என்பதை
நடைமுறைப்படுத்தவே இந்தப் புதிய கல்விக் கொள்கை குலக்கல்வியை
ஊக்குவிப்பது, பன்னாட்டு நிறுவனங்கள் கல்வித்
துறையில் முதலீடு செய்வது போன்ற அபாயகரமான முடிவுகளுடன் உள்ள இந்தப் புதிய
கல்விக் கொள்கையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இக்கல்வி
கொள்கைக்கு எதிராக பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அரசியல்
கட்சிகள் அனைத்தும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனவே, புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு (22.10.2016) கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் ஷாஜஹான் தலைமையில் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மாநில செயலாளர் அலாவுதீன், தமுமுக மாவட்ட பொருளாளர் ஹாஜா நஜிமுதீன், மாவட்ட துணை செயலாளர்கள் சாதிக் அலி, அக்பர்ஷா, ஹாஜா மெய்தீன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் அப்துல் காசிம், யூசுப்கான், மெய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், தலைமை செயற்குழு உறுப்பினர் யூசுப் எஸ்.பி, புதுச்சேரி மாவட்ட செயலாளர் பஷீர் அஹமது, மாவட்ட பொருளாளர் ராஜா முஹம்மது, திமுக மாநில துணை அமைப்பாளர் ஆசைத்தம்பி, பாமக மாவட்ட செயலாளர் தேவமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி அரசியல் குழு மாநில செயலாளர் அரசு வணங்காமுடி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் தமிழழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கலியபெருமாள், நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் மரிய அந்துவான், இந்தியா யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட துணை தலைவர் பகுருதீன், கிறிஸ்துவ முன்னேற்ற இயக்க பொதுச் செயலாளர் ஜோசப் குணாளன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
முடிவில் மாவட்ட இளைஞரணி செயலாளர் சர்புதீன் நன்றியுரை நிகழ்த்தினார்.


