அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Monday, December 12, 2016

500,1000 ரூபாய் செல்லாது அறிவிப்பு : மோடி அரசைக் கண்டித்து - காரைக்கால் ஸ்டேட் பேங்க் முன்பு மனிதநேய மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்



நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்யாமல் கடந்த 8.11.2016 அன்று திடீரென ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நோயாளிகள், மூத்த குடிமக்கள், பெண்கள் என கோடிக்கணக்கான மக்கள் தினந்தோறும் வங்கிகளின் முன்பு தங்களின் சேமிப்பு பணத்தை மாற்றுவதற்காக மணிக்கணக்கில் நிற்கும் நிலையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. 19 நாட்களுக்கு மேலாகியும் நிலைமை கொஞ்சமும் சீராகவில்லை. மேலும் மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து நோயாளிகள், முதியோர்கள், பெண்கள், குழந்தைகள், வங்கி மேலாளர், வங்கி ஊழியர்கள் என சுமார் 75 பேர் உயிரிழந்துள்ளதாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. கடந்த சில நாட்களாக நாடாளுமன்றம் முடங்கிய நிலையில், இந்தப் பிரச்சினையை மிகவும் தீவிரமாக எடுத்துள்ள எதிர்க் கட்சியினர் அனைவரும் மத்திய அரசுக்கு எதிராக ஓரணியில் நின்று போராடி வருகின்றார்கள்.

மத்திய அரசின் கையாலாகத்தனத்தையும், நாட்டு மக்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி அவர்களைப் பிச்சைக்காரர்களாக்கி அலைக்கழித்து வருவதைக் கண்டித்து இன்று நாடு தழுவிய அளவில் முழுஅடைப்பு போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் அறிவித்தததை தொடர்ந்து காரைக்கால் ஸ்டேட் பேங்க் முன்பு மனிதநேய மக்கள் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம் (28.11.2016) நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் B.ஷாஜஹான் தலைமை வகித்தார், தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், தலைமை செயற்குழு உறுப்பினர் யூசுப் எஸ்.பி, மாவட்ட பொருளாளர் ராஜா முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர், ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் M.R.சாதிக் அலி, P.ஹாஜா மெய்தீன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அப்துல் காசிம், K.முஹம்மது மெய்தீன், G.கமால் ஹுசைன், மாவட்ட இளைஞரணி செயலாளர் M.முஹம்மது சர்புதீன், மனிதநேய வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அன்வர், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முஹம்மது, பயாஸ் காரை (தெற்கு) தொகுதி செயலாளர் H.M.இக்பால், நெடுங்காடு தொகுதி செயலாளர் K.A ஹாஜா மெய்தீன், நகர செயலாளர் முஹம்மது மாசிம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முஹம்மது சிக்கந்தர், புதுத்துறை முஹம்மது யூசுப், கருக்கன்குடி அசாருதீன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் B.முஹம்மது அஷ்ரப் அலி, ஷாஹுல் ஹமீது, முஹம்மது நஜிமுதீன், கருக்கன்குடி கிளை செயலாளர் நத்தர்ஷா, நகர துணை செயலாளர்கள் A. அன்வர் அலி, A. முஹம்மது யூசுப் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP