30 வருடங்களாக குடும்பத்தை பிரிந்துவந்த முதியவரை குடும்பத்தினரிடம் சேர்த்த தமுமுக
காரைக்கால், பாரிஸ் நகரில் உள்ள ஒரு வீட்டு திண்ணையில் வயதான முதியவர்
ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் படுத்து கிடப்பதாக அறிந்த அப்பகுதி தமுமுக
நிர்வாகிகள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலாளர்
சர்புதீன் ஆகியோர் அம்முதியவரை பார்த்து விசாரித்து அவருக்கு தேவையான
உதவிகளை செய்துவிட்டு, அவரிடம் அவரது குடும்பத்தை பற்றிய தகவல்களை வாங்கி
அத்தகவல்களுடன் அவரது புகைப்படத்தயும் போட்டு face book மற்றும் whatsapp மூலம் தகவல் வெளியாக்கினர்.
அத்தகவல்களின் மூலம் விவரமறிந்த அறந்தாங்கி, கிருஷ்ணாட்சிப்பட்டினம்
பகுதியை சேர்ந்த அம்முதியவரின் மகள், மருமகன், பேரன் மற்றும் உறவினர்கள்
சர்புதீன் அவர்களை தொடர்பு கொண்டு பேசினார்கள். அம்முதியவர் பெயர் காதர்
ஹீசேன் என்றும், அவர் மன உளைச்சல் காரணமாக ஊரைவிட்டு வந்து 30 வருடம்
ஆகிறது என்றும் அவரை பல வருடங்கள் தேடிவருவதாகவும் அக்குடும்பத்தின்
தெரிவித்தனர். பின்னர் அவர்கள் காரைக்காலுக்கு வருகை தந்து அந்த முதியவரை
அழைத்து சென்றனர். அம்முதியவரும், குடும்பத்தினரும் சகோதரர்களுக்கு நன்றி
தெரிவித்து விட்டு சென்றனர்.
எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே.
எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே.
