அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Monday, December 12, 2016

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ..... டிசம்பர் 6 -பாபரி பள்ளிவாசல் உரிமை மீட்பு போராட்டம் ஒத்திவைப்பு

-தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அறிவிப்பு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் எம்.எஸ்.அலாவுதீன் வெளியிடும் அறிக்கை
-----------------------------------------------------

1992 டிசம்பர் 6 அன்று பாபர் பள்ளிவாசல் உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பள்ளிவாசல் மீண்டும் அதே இடத்தில் கட்டித் தரப்படுமென அன்றைய பிரதமர் திரு. நரசிம்ம ராவ் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வழியான உரையில் உறுதி அளித்தார். பாபர் பள்ளிவாசல் இடிப்புக்கு காரணமானவர்கள் என்று லிபரான் ஆணையத்தினால் சுட்டிக் காட்டப்பட்ட குற்றவாளிகள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாபரி பள்ளிவாசல் விவகாரத்தில் நீதி கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடந்த 1995 முதல் டிசம்பர் 6 அன்று தமிழம் மற்றும் புதுச்சேரியில் நீதி கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு டிசம்பர் 6 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களென 51 இடங்களில் தர்ணா போராட்டத்திற்கு அறிவிப்பு விடப்பட்டிருந்தது.

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் உடல்நலனில் தீடீரென பின்னடைவு ஏற்பட்டு இதன் காரணமாக மக்கள் பெரும் கவலையுடனும் பதட்டத்துடனும் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு டிசம்பர் 6 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 51 இடங்களில் பாபர் பள்ளிவாசல் பிரச்னையில் நீதி கேட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடத்தவிருந்த தர்ணா போராட்டம் தள்ளிவைக்கப்படுகிறது என தலைமை நிர்வாக குழு அறிவித்துள்ளது.

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் தற்போதைய சுகவீனத்திலிருந்து மீண்டு தனது முதலமைச்சர் பணியை மீண்டும் முழு வீச்சில் ஆற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP