அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Monday, December 12, 2016

காரைக்கால் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்

மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் B.ஷாஜஹான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கடைமடை பகுதியான காரைக்காலுக்கு காவிரிநீர் வந்து சேராததாலும், வடகிழக்கு பருவமழை அறவே பெய்யாததாலும் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியாலும், காரைக்காலில் குறுவை, சம்பா ஆகியவை சேர்ந்து வெறும் 5 ஆயிரம் ஹெக்டேர் மட்டுமே சாகுபடி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
காவிரி நீர் வரத்து இல்லததால் விளைநிலம் தரிசாக வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுள்ளது. ஆண்டு தோறும் சம்பா சாகுபடியை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்குவது வழக்கம். கடந்த 2015-ஆம் ஆண்டுகூட ஆகஸ்ட் 20-ஆம் தேதி காவிரிநீர் காரைக்காலுக்குள் வந்தது. ஆனால், இந்த ஆண்டு காவிரி நீர் காரைக்கால் பகுதிக்கு கொஞ்சம் கூட வரவில்லை. ஆங்காங்கே சில இடங்களில் மழையை நம்பியும், காவிரி நீர் வரும் என்ற நம்பிக்கையிலும் நடவு செய்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஐப்பசி மாதத்தில் கூட மழை பெய்யவில்லை.
மேலும், 15 ஆண்டுகளுக்கு முன்பு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ள ஏரிகள் வெட்டும் திட்டம், விவசாயம் தழைக்க காரைக்கால் மாவட்டத்தில் ஓடும் 6 ஆறுகளையும் இணைக்க நடவடிக்கை  எடுப்பது மற்றும் ஆறுகளில் வாய்ப்புகள் உள்ள இடங்களில் தடுப்பணைகளை கட்டுவது போன்ற திட்டங்கள் இன்றுவரை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
 எனவே, மேலும் காலந்தாழ்த்தாமல் காரைக்கால் மாவட்ட விவசாயிகள் மற்றும் மக்களை பாதுகாக்கும் வகையில் காரைக்கால் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். வருகிற ஜனவரி மாதம் முதல் கோடை சாகுபடிக்கு ஏற்ற உளுந்து, பயிறு, பருத்தி, எள், நிலக்கடலை, மக்காச்சோளம் ஆகிய பயிர்களை சாகுபடி செய்ய அரசு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போய்க் கொண்டே வருவதற்கும்   காலாகாலத்தில் மழை பெய்யாத நிலைமைகளுக்கும் முக்கிய காரணமான காட்டுக் கருவைச் செடிகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். மழைநீரை சேமிக்க ஏதுவாக திட்டம் வகுக்க வேண்டும், விவசாயத்திற்காக அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்டுள்ள விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும்  என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கேட்டுக்  கொள்கிறோம்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP