அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Sunday, December 11, 2016

விவசாயிகளின் மக்கள் சந்திப்பு பரப்புரை பயண குழுவை - காரைக்காலில் வரவேற்றது மனிதநேய மக்கள் கட்சி

மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழு அமைத்திட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் ஏற்க மறுத்து கர்நாடகாவிற்கு ஆதரவாக அரசியல் லாபநோக்கட்டத்தோடு தமிழகத்திற்கு துரோகம் இழைத்துள்ள மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும், காவிரி பிரச்னையில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு துரோகம் செய்திட்ட மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழு அமைத்திட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும்  தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான தமிழகம் தழுவிய குழு மக்கள் சந்திப்பு பரப்புரை பயணத்தை கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் தொடங்கி சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளனர்.

மக்கள் சந்திப்பு பரப்புரை பயண வாகனம் காரைக்கால் வருகை தந்தது, அக்குழுவினரை வரவேற்க விவசாய சங்கத்தின் அழைப்பின் பேரில் காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் B.ஷாஜஹான் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் ஹாஜா மெய்தீன், நெடுங்காடு தொகுதி மமக செயலாளர் ஹாஜா மெய்தீன் சென்று வரவேற்று கோரிக்கைகள் வெற்றி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP