மாவட்ட ஆட்சியருக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை
காரைக்கால் மாவட்ட ஆட்சியருக்கு மனிதநேய மக்கள்
கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் B.ஷாஜஹான் எழுதியுள்ள கடிதத்தில்
கூறியிருப்பதாவது :
...
-------
புதுச்சேரி
அரசில் உள்ள மின்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பாக வசூல் செய்யப்படும்
மின்சார வரி மற்றும் குடிநீர் வரி ஆகியவற்றை கணினிப்படுத்தி சம்பந்தப்பட்ட
தலைமை மற்றும் கிளை அலுவலகங்களில் கணினி மையம் ஏற்படுத்தி வசூல் செய்து
வருகின்றனர், இதனால் பொதுமக்களும் எவ்வித சிரமும் இன்றி குறிப்பிட்ட
காலத்திற்குள் வரியை செலுத்தி வருகின்றனர். இதனால் அரசுக்கும் நிதி
முறைப்படி வந்து சேருகிறது, மக்களும் அலைச்சலில்லாமல் செலுத்தி
வருகின்றனர்.
அதேவேளையில், நகராட்சி மற்றும் கொம்யூன்
பஞ்சாயத்துகள் மூலம் வசூல் செய்யப்படும் வீட்டு வரி, குடிநீர் வரி, கேபிள்
வரி, தொழில் வரி மற்றும் இதர வரிகளை முறைப்படி இதுவரை
கணினிப்படுத்தப்படாமல் உள்ளதால், வரிகள் முறைப்படுத்தப்படாமல் உள்ளது.
மேலும், செலுத்தப்படும் வரிகளும் முறையாக கணக்கிடக்கப்படுகிறதா எனவும்
தெரியவில்லை. பணம் செலுத்தப்பட்ட காலங்களுக்கே மீண்டும் மீண்டும் பணம்
செலுத்த நோட்டீஸ் வருவதாக புகார்கள் வருகின்றன. மேலும், வரி செலுத்த
அலுவலகத்திற்கு சென்றால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் வசூல் செய்ய வெளியில்
சென்றுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால், வரிகள் செலுத்த வரும் மக்கள்
அலைக்களிக்கப்படுகின்றனர். மேலும், இடையில் புகும் ஒரு சில ஊழியர்கள் பணம்
செலுத்த வரும் பொதுமக்களிடம் இருந்து பணத்தை செலுத்துவதாக பெற்று
அந்தப்பணம் செலுத்தப்படாமலேயே போய் விடுகிறது, . பொதுமக்கள் பணத்தை செலுத்தி
விட்டதாக நினைத்து கொள்கின்றனர். சில நேரங்களில் செலுத்த வேண்டிய தொகைக்கு அதிகமாகவும் பெறுவதாகவும் புகார் வருகிறது.
ஆகவே, நகராட்சி மற்றும்
கொம்யூன் பஞ்சாயத்துகளின் தனி அதிகாரியாகிய தாங்கள் இவ்விஷயத்தில்
முழுமையாக தலையிட்டு வீட்டு வரி, தண்ணீர் வரி, கேபிள் வரி மற்றும் அனைத்து
வரிகளையும் கணினிப்படுத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு
கணினி பயனீட்டு
பட்டியல் அனுப்பியும், சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும்
கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்களில் பணம் செலுத்த கணினி
மையம் ஏற்படுத்தி அந்த மையத்தில் பணம் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டுமென
மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம்.