அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Sunday, January 8, 2017

தமிழகம் மற்றும் புதுச்சேரியை வறட்சி மாநிலங்களாக அறிவிக்க வலியுறுத்தி

தஞ்சாவூரில் 19.01.2017 அன்று மாபெரும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்

மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு
++++++++++++++++++++++++
மனிதநேய மக்கள் கட்சியின் டெல்டா மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது தலைமையில் காரைக்காலில் நடைபெற்றது, மாநில அமைப்பு செயலாளர்கள் தஞ்சை பாதுஷா, மாயவரம் அமீன், தாம்பரம் யாகூப், தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், காரைக்கால் மாவட்ட செயலாளர் ஷாஜஹான் அனைவரையும் வரவேற்றார், 
 
இக்கூட்டத்தில் மமக தேர்தல் அதிகாரி மீரான் மொஹைதீன், மாநில மருத்துவ சேவை அணி செயலாளர் கிதர் முஹம்மது, மாநில மாணவர் இந்தியா செயலாளர் நூர்தீன், தஞ்சை (தெற்கு), தஞ்சை (வடக்கு), திருவாரூர், நாகை (வடக்கு), நாகை (தெற்கு), காரைக்கால் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை  செயற்குழு ,குழு உறுப்பினர் அப்துல் ரஹீம் நன்றி கூறினார்.

 




பின்னர் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது செய்தியாளர்களை சந்தித்து கூறியவதாவது :

"மனிதநேய மக்கள் கட்சியின் டெல்டா மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் காரைக்காலில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் தமிழகத்தில் பெருகும் விவசாயிகளின் தற்கொலைக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், தமிழகம் மற்றும் புதுச்சேரியை வறட்சி மாநிலங்களாக அறிவிக்க வலியுறுத்தியும்,இறந்த விவசாய குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க கோரியும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக தஞ்சாவூரில் வரும் 19.01.2017 அன்று டெல்டா மாவட்டத்தில் உள்ள விவசாயிகளை ஒன்று சேர்த்து   மாபெரும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட கட்சிகளையும், விவசாய அமைப்புகள் மற்றும் தோழமை அமைப்புகளை அழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

புதுச்சேரி மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வரை செயல்படவிடாமல் தடுத்தும், அதிகாரிகளை மக்கள் நல பணிகளை செய்யவிடாமல் தடுத்து, புதுச்சேரி நிர்வாகத்தை ஸ்தம்பிக்க செய்து மக்களுக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாத சூழ்நிலையை உண்டாக்கி வரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை மத்திய அரசு திரும்ப  வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி கேட்டு  கொள்கிறது.

புதுச்சேரி மாநில முன்னாள் சபாநாயகரும், முன்னாள் அமைச்சருமான வி.எம்.சி.சிவகுமார் அவர்கள் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவர் பாதுகாப்புடன் இருந்துவந்த நிலையில் காரைக்காலில் கூலிப்படையால் மிகக் கொடூரமான முறையில் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிப்பதுடன், கொலைக்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைது செய்து தகுந்த தண்டனை வழங்கவேண்டுமென்றும், காரைக்காலில் முதன்முறையாக உருவாகியுள்ள வெடிகுண்டு கலாச்சாரத்தையும், ஆயுதக் கலாச்சாரத்தையும் தடுத்து நிறுத்த வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது" என்றார்.பேட்டியின் போது மாவட்ட பொருளாளர் ராஜா முஹம்மது, மாவட்ட துணை செயலாளர்கள் சாதிக் அலி, அக்பர்ஷா, ஹாஜா மெய்தீன் உட்பட நிர்வாகிகள்  உடனிருந்தனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP