அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Tuesday, February 7, 2017

காரைக்கால் நகர் முழுவதும் மரக்கன்று நடுதல், கொடியேற்றுதல், கொசு மருந்து அடித்தல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

 மனிதநேய மக்கள் கட்சியின் 9 ம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலம் முழுவதும் பிப்ரவரி 7 அன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன, அதன் ஒரு பகுதியாக மனிதநேய மக்கள் கட்சி சார்பாக காரைக்கால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மரக்கன்று நடுதல், கொடியேற்றுதல், கொசு மருந்து அடித்தல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 காரைக்கால் நகரம் மனிதநேய மக்கள் கட்சி அலுவலக பெயர் பலகை புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது, காரை கிழக்கு கிளை மற்றும் மேற்கு கிளை மமக சார்பாக முக்கிய இடங்களில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது, மாவட்ட இளைஞர் அணி சார்பாக மண்ணுக்கேத்த மரக்கன்றுகள் நடப்பட்டன, சுற்றுப்புற சூழல் அணி சார்பாக கொசு மருந்து அடிக்கப்பட்டது.

 இந்நிகழ்ச்சிகளில் தமுமுக மாநில செயலாளர் அலாவுதீன், மமக மாவட்ட செயலாளர் ஷாஜஹான், மாவட்ட பொருளாளர் ராஜா முஹம்மது, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அப்துல் ரஹீம், ஹாஜா நஜிமுதீன், முஹம்மது யூசுப் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட துணை செயலாளர்கள் சாதிக் அலி, ஹாஜா மெய்தீன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முஹம்மது சர்புதீன், நகர செயலாளர் முஹம்மது மாசிம், ஆகியோர் தலைமையில் கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
 இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வணிகர் சங்க செயலாளர் அன்வர், மாவட்ட வணிகர் சங்க பொருளாளர் முஹம்மது நாசர், தொகுதி செயலாளர்கள் இக்பால், முஹம்மது இப்ராஹிம், நெடுங்காடு ஹாஜா மெய்தீன்,  மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் அப்துல் காசிம், மெய்தீன், ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் முஹம்மது நஜிமுதீன், மாணவர் அணி மாவட்ட செயலாளர் சதாம் ஹுசைன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிக்கந்தர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் புதுத்துறை யூசுப், செய்யது புஹாரி,  பாசில், முத்து, ராஜா முஹம்மத்த்து உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP