காரைக்கால் மாவட்டம் - திருநள்ளாறில் மரக்கன்று நடுதல் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரச்சுரம் வழங்கப்பட்டது.
மனிதநேய
மக்கள் கட்சியின் 9 ம் ஆண்டு துவக்கத்தை
முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலம் முழுவதும் பிப்ரவரி 7
அன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன, அதன் ஒரு பகுதியாக
மனிதநேய மக்கள் கட்சி சார்பாக காரைக்கால் மாவட்டம் திருநள்ளார் கிளை
சார்பாக திருநள்ளாறில் பசுமை காரைக்கால் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள்
நடுதலும் மற்றும் மக்கள் விழிப்புணர்வுக்கு துண்டு பிரச்சுரம் வழங்கும்
நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கு திருநள்ளார் கிளை செயலாளர் ராஜா முஹம்மது தலைமை வகித்தார், தமுமுக மாநில செயலாளர் அலாவுதீன், மமக மாவட்ட செயலாளர் ஷாஜஹான், மாவட்ட பொருளாளர் ராஜா முஹம்மது, தலைமை செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹீம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஹாஜா மெய்தீன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முஹம்மது சர்புதீன், நகர செயலாளர் முஹம்மது மாசிம், மாவட்ட வணிகர் சங்க செயலாளர் அன்வர், நெடுங்காடு தொகுதி செயலாளர் ஹாஜா மெய்தீன், கிளை துணை செயலாளர் ஜாஹிர் ஹுசைன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
-