அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Wednesday, February 8, 2017

காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விழிப்புணர்வு பிரச்சார துண்டு பிரச்சுரம் விநியோகம்.

 மனிதநேய மக்கள் கட்சியின் 9 ம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன, அதன் ஒரு பகுதியாக மனிதநேய மக்கள் கட்சியின் மனிதநேய வணிகர் சங்கம் சார்பாக காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலத்தடி நீரை உறிஞ்சும் மற்றும் உடலுக்கு தீங்கான பெப்சி, கோக் உட்பட குளிர்பானங்களை புறக்கணிப்போம், இளநீர் மற்றும் உள்ளூர் குளிர்பானங்களை அருந்துவோம்,உள்ளூர் வணிகர்களிடம் வர்த்தகத்தில் ஈடுபடுவோம், ஆன்லைன் வர்த்தகத்தை தவிர்ப்போம், நிலத்தடி நீரை பாதுக்காக்க சீமை கருவேல மரங்களை அழிப்போம், மழை நீரை சேமிப்போம். பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுகளை காலத்ததோடு பதிவு செய்வோம் உட்பட பல்வேறு மக்கள் விழிப்புணர்வு பிரச்சார துண்டு பிரச்சுரம் விநியோகம் செய்யப்பட்டது.


இந்நிகழ்ச்சிக்கு மனிதநேய வணிகர் சங்க மாவட்ட செயலாளர் முஹம்மது அன்வர் தலைமை வகித்தார், தமுமுக மாநில செயலாளர் அலாவுதீன், மமக மாவட்ட செயலாளர் ஷாஜஹான், மாவட்ட பொருளாளர் ராஜா முஹம்மது, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அப்துல் ரஹீம், ஹாஜா நஜிமுதீன், முஹம்மது யூசுப் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




 இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வணிகர் சங்க பொருளாளர் முஹம்மது நாசர், மாவட்ட துணை செயலாளர்கள் சாதிக் அலி, ஹாஜா மெய்தீன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முஹம்மது சர்புதீன், நகர செயலாளர் முஹம்மது மாசிம், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் முஹம்மது பயாஸ், ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் முஹம்மது நஜிமுதீன், தொகுதி செயலாளர்கள் இக்பால், முஹம்மது இப்ராஹிம், நெடுங்காடு ஹாஜா மெய்தீன், திருப்பட்டினம் முஹம்மது ஆசிக், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் அப்துல் காசிம், மெய்தீன், மாணவர் அணி மாவட்ட செயலாளர் சதாம் ஹுசைன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிக்கந்தர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் புதுத்துறை யூசுப், செய்யது புஹாரி, அம்பகரத்தூர் பாசில், முத்து, திருநள்ளார் ராஜா முஹம்மது உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.





Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP