மாஹேயிலிருந்து 34 மதுக்கடைகளை காரைக்காலுக்கு கொண்டு வரும் முயற்சியினை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும்
மனிதநேய மக்கள் கட்சி காரைக்கால் மாவட்ட செயலாளர் B.ஷாஜஹான் வெளியிடும் பத்திரிக்கை செய்தி :
தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை அகற்றக்கூறி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதற்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கிவந்த 168 மதுக்கடைகளை மூட புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்தள்ளதாள் காரைக்கால் நெடுஞ்சாலைகளில் இயங்கிவந்த 40 மதுக்கடைகளும் மூடப்பட்டன.
சிறிய
மாநிலமான புதுச்சேரியில் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடை என 473
மதுபானக் கடைகள் உள்ளன. இந்த மதுக்கடைகள் தவிர்த்து நூற்றுக்கணக்கான சாராயக்கடைகளும்,
கள்ளுக்கடைகளும் உள்ளன. மக்களை
அழிக்கும் மதுவை புதுச்சேரி மாநிலத்தில் முழுமையாக ஒழிக்கும் விதமாக
புதுச்சேரியில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என மனிதநேய மக்கள்
கட்சி தொடர்ச்சியாக போராடி வருகிறது. அதன் முன்பாக தேசிய நெடுஞ்சாலை,
கல்விக்கூடம், மத வழிப்பாட்டுத்தலம் மற்றும் குடியிருப்புகளுக்கு அருகில்
உள்ள மதுக்கடைகளை அகற்ற
வேண்டும் எனவும், காரைக்கால், புதுத்துறை பாலம் இறக்கத்தில் ஏராளமான குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள சாராயக்கடையை அகற்ற வேண்டும் எனவும் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகிறோம்.
இந்நிலையில்,
மாஹேயில் மூடப்பட்டுள்ள 34 மதுக்கடைகளை காரைக்காலுக்கு மாற்றம் செய்ய
புதுச்சேரி அரசு முயற்சி செய்து வருவதாக தெரிய வருகிறது. ஏற்கனவே, சிறிய
மாவட்டமான காரைக்காலில் அளவுக்கு அதிகமான அளவில் மதுக்கடைகள் இருந்து
வருவதால் மக்கள் குடிக்கு ஆளாகி குடும்பம் சீரழிந்து வருகிறது, மாணவர்கள்,
இளைஞர்கள் மட்டும் சிறுவர்கள் கூட மதுவுக்கு அடிமையாக வரும் நிலையில்
புதுச்சேரி அரசின் இந்த முடிவை மனிதநேய மக்கள் கட்சி முழுமையாக எதிர்க்கிறது. எனவே, மாஹேயிலிருந்து 34 மதுக்கடைகளை காரைக்காலுக்கு கொண்டு வரும் முயற்சியினை புதுச்சேரி உடனைடியாக நிறுத்த வேண்டுமெனவும், அதுபோல் கல்விக்கூடம், மத வழிப்பாட்டுத்தலம், மற்றும் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளையம் அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் புதுச்சேரி அரசை மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.