திருநள்ளார் - அத்திப்படுகை சாலையை செப்பனிட வேண்டும்
அமைச்சர் கமலக்கண்ணனிடம்... மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை++++++++++++++++++++++++++++++++
புதுச்சேரி மாநில வேளாண் மற்றும் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் அவர்களை மனிதநேய மக்கள் கட்சியின் திருநள்ளார் கிளை செயலாளர் ராஜா முஹம்மது தலைமையில் துணை செயலாளர் அக்பர் அலி, இளைஞர் அணி செயலாளர் ஹாஜா நஜ்முதீன், மனிதநேய தொழிற்சங்க செயலாளர் அலாவுதீன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்,
அம்மனுவில் "திருநள்ளாரிலிருந்து அத்திப்படுகை மற்றும் நெய்வாச்சேரி செல்லும் சாலைகள் செப்பனிடப்பட்டு பல வருடங்கள் ஆவதால், அச்சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அச்சாலையில் வாகனத்தில் செல்வோர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, அச்சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், திருநள்ளார் பள்ளிவாசல் அருகிலிருந்து கடைத்தெரு வரை உள்ள நூலாறு சின்ன வாய்க்கால் குப்பைகளால் முழுவதும் அடைக்கப்பட்டு புதர்கள் மண்டி கிடப்பதால் தண்ணீர் ஓடாமல் தேங்கி நிற்கிறது, இதனால் அப்பகுதி மக்கள் கொசுக்கள் மற்றும் விஷ ஜந்துக்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகவே, உரிய நடவடிக்கை எடுத்து நூலாறு வாய்க்காலை சுத்தம் செய்து புதர்களை அப்புறப்படுத்தி தர வேண்டும், திருநள்ளாரில் உள்ள இறந்த முஸ்லிம்களை அடக்கம் செய்யும் மைய்யவாடிக்கு தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
தகவல் : எம்.எஸ்.அலாவுதீன், மாநில செயலாளர்