காரைக்காலில், மீனவர்கள் போராட்டத்திற்கு - மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு
காரைக்கால் மீனவர்கள் மீது தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை கண்டித்து, மீனவர்களை சிறைபிடித்து அவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்துள்ளதை கண்டித்தும், சிறை பிடிக்கப்பட்ட 6 மீனவர்களையும் அவர்களது படகினையும் உடனடியாக மீட்டு தர மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் 7.4.2017 அன்று காரைக்கால் மாவட்ட அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஷாஜஹான் கலந்து கொண்டு கோரிக்கைக்கு ஆதவு தெரிவித்து கண்டன உரையாற்றினார், ஆர்ப்பாட்டத்தில் மமக மாவட்ட பொருளாளர் ராஜா முஹம்மது, மாவட்ட துணை செயலளார் ஹாஜா மெய்தீன், நெடுங்காடு தொகுதி செயலாளர் ஹாஜா மெய்தீன், சமூக நீதி மாணவர் இயக்க மாவட்ட பொருளாளர் சபீர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

