அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Saturday, April 8, 2017

காரைக்காலில், மீனவர்கள் இரண்டாம் நாள் போராட்டத்திற்கு - மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு



காரைக்கால் மீனவர்கள் மீது தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை கண்டித்து, மீனவர்களை சிறைபிடித்து அவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்துள்ளதை கண்டித்தும், சிறை பிடிக்கப்பட்ட 6 மீனவர்களையும் அவர்களது படகினையும் உடனடியாக மீட்டு தர மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் 8.4.2017 அன்று இரண்டாம் நாளாக காரைக்கால் மாவட்ட அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஷாஜஹான் கலந்து கொண்டு கோரிக்கைக்கு ஆதவு தெரிவித்து கண்டன உரையாற்றினார், ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மமக மாவட்ட பொருளாளர் ராஜா முஹம்மது, நெடுங்காடு தொகுதி செயலாளர் ஹாஜா மைதீன், காரை வடக்கு தொகுதி செயலாளர் ஹாஜா மெய்தீன், இளைஞரணி மாவட்ட செயலாளர் சர்புதீன், தமுமுக அம்பகரத்தூர் கிளை பொருளாளர் பாசில் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP