காரைக்கால், காமராஜ் சாலை மதுக்கடையை அகற்ற வேண்டும், குடியிருப்புகளுக்கு மத்தியில் மதுக்கடைகளை அமைக்க கூடாது
மாவட்ட ஆட்சியரிடம் - மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை
+++++++++தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை அகற்றக்கூறி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதை தொடர்ந்து காரைக்கால் நெடுஞ்சாலைகளில் இயங்கிவந்த 40 மதுக்கடைகளும் மூடப்பட்டன. இதனால் வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும், பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கும் தருவாயில், மூடப்பட்ட 40 கடைகளும் ஊர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளிலும், குடியிருப்புகளுக்கு மத்தியிலும், கல்விக்கூடம் மற்றும் வழிப்பாட்டுத்தலத்திற்கு அருகிலும் கொண்டு வர முயற்சி நடப்பதாக தெரிய வருகிறது. வாகனங்கள் அதிகளவில் செல்லும் சாலையும், குடியிருப்புகள் மற்றும் வழிப்பாட்டுத்தலங்கள் அதிகம் உள்ள சாலையான காமராஜ் சாலையில் 4 அல்லது 5 மதுக்கடைகளை கொண்டு வர முயற்சி நடப்பதாக தெரிய வருகிறது. இச்செயலை மனிதநேய மக்கள் கட்சி முற்றிலும் எதிர்க்கிறது. காமராஜ் சாலையில் புதிய மது கடைகளை அமைக்க கூடாது எனவும்,
காமராஜ் சாலையில் வெல்கம் ஒயின்ஸ் என்ற
மொத்த மது விற்பனை கடையில் சட்டத்திற்கு புறம்பாக தற்பொழுது சில்லறை
விற்பனையும் நடைபெறுவதால் எந்த நேரமும் மது பிரியர்கள் கூட்டம் அதிகமாகி,
மது வாங்க குவிவதால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாமலும், அருகில் உள்ள
குடியிருப்புகளுக்கு செல்லும் மக்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமலும் பெரும்
பாதிப்புக்கு ஆளாகின்றனர். வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, வெல்கம்
ஒயின்ஸ் என்ற மொத்த மது விற்பனை கடையை அங்கிருந்து அகற்றி, குடியிருப்பு
இல்லாத பகுதிக்கு மாற்ற வேண்டுமெனவும்,
மேலும்,
புதுத்துறை பாலம் அருகில் தருமபுரம் செல்லும் வழியில் குடியிருப்புகளுக்கு
மத்தியில் மதுக்கடை அமைக்கப்பட்டுள்ளதால், அங்கு குடித்து விட்டு
வருபவர்கள் சுய நினைவின்றி ஆடைகளை அவிழ்த்து விட்டு சாலையில்
கிடக்கின்றனர். ஒரு சிலர் குடித்து விட்டு அருகில் உள்ள வீடுகளில் தகராறு
செய்கின்றனர். இந்த மதுக்கடை இஸ்லாமியர்களின் வழிப்பாட்டுத்தலத்திற்கு
அருகில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தத்தக்கது. ஆகவே, குடியிருப்புக்கு
மத்தியில் உள்ள மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென்ற
கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் நகர மனிதநேய மக்கள் கட்சியின் நகர செயலாளர் முஹம்மது மாசிம் மாவட்ட சார்பு ஆட்சியருக்கு மனு அளித்தார், பின்னர் தாசில்தார் பொய்யாதமூர்த்தியை மாவட்ட செயலாளர் ஷாஜஹான் , தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம் ஆகியோர் நேரில் சந்தித்து மனு அளித்தனர். இந்த இரு சந்திப்புகளிலும் மாவட்ட துணை செயலாளர்கள் சாதிக் அலி, ஹாஜா மெய்தீன், தமுமுக மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் காசிம், முஹம்மது மெய்தீன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் முஹம்மது பயாஸ், இளைஞரணி மாவட்ட செயலா





