அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Saturday, April 22, 2017

திருநள்ளாரில் - மனிதநேய மக்கள் கட்சியின் மோர் பந்தல்

கடும் வெயிலால் வாடும் மக்களின் தாகத்தை தணிக்கும் விதமாக மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்டம், திருநள்ளார் கிளை சார்பாக திருநள்ளாரில் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. கிளை செயலாளர் ராஜா முஹம்மது தலைமையில் நடைபெற்ற மோர் வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமுமுக மாநில செயலாளர் காரை அலாவுதீன்,  மாவட்ட செயலாளர் ஷாஜஹான், மாவட்ட துணை செயலாளர்கள் சாதிக் அலி, ஹாஜா மெய்தீன், காரை வடக்கு தொகுதி செயலாளர் முஹம்மது இப்ராஹீம், திருநள்ளார் நாயுடு சங்க தலைவர் பிராபகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளை பொருளாளர் ஜாஹீர் ஹுசைன், கிளை துணை செயலாளர் அக்பர் அலி, முஹம்மது ஹாலிது, முஹம்மது சப்ரிது, அறிழகன், கலைவாணன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

 இன்று சனிக்கிழமையாக இருந்ததால் திருநள்ளார் சனீஸ்வரபகவான் கோயிலுக்கு பல்வேறு ஊர்களிலிருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் தாகத்தை இம்மோர் பந்தல் தீர்த்து வைத்ததாக பக்தர்களும், ஊர் மக்களும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்து கொண்டனர்.

 

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP