அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Wednesday, May 31, 2017

மாடு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட பிராணிகளை இறைச்சிக்காக விற்க தடைச் செய்துள்ள மத்திய பாஜக அரசின் தடைசட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த மாட்டோம்


புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்புக்கு 

தமுமுக வரவேற்பு


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக புதுச்சேரி மாநில செயலாளர் M.S.அலாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
++++++++++
புதுவை பிரெஞ்சு கலாச்சாரத்தை கொண்ட மாநிலம். இங்கு பெரும்பாலான மக்கள் மாட்டு இறைச்சி சாப்பிடுகிறார்கள். குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் விரும்பி சாப்பிடும் உணவாக மாட்டு இறைச்சி உள்ளது. மேலும் தோல் தொழிலிலும் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசின் தடை சட்டத்தை நிச்சயம் புதுச்சேரியில் அமல்படுத்த மாட்டோம்.

இந்த சட்டத்துக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் கர்நாடகா, கேரளா மாநிலங்கள் இந்த சட்டத்தை எங்கள் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித் துள்ளன.
அதே போல் புதுவையிலும் மத்திய அரசு தன்னிச்சையாக கொண்டு வந்த இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம். தேவைப்பட்டால் புதுவையில் மாட்டு இறைச்சி விற்பனையை தொடர தனிச்சட்டம் கொண்டு வந்து பாதுகாப்பு அளிக்கப்படும். இது சம்பந்தமாக பிரதமருக்கு நான் இன்றே கடிதம் அனுப்ப இருக்கிறேன் என புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்கள்  கூறியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி  மாநிலம் முழுவதும் மத்திய அரசின் தடை சட்டத்தை கண்டித்தும், இந்த சட்டத்தை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து தமுமுக போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில் புதுச்சேரி முதல் அமைச்சர் மாண்புமிகு நாராயணசாமி அவர்களின் அறிவிப்பு ஜனநாயகத்தை முழுமையாக நம்பியுள்ள மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.  புதுச்சேரி முதல் அமைச்சரின் இந்த அறிவிப்பினை தமுமுக வரவேற்பதோடு, நன்றியினையும் தெரிவித்து கொள்கிறது. மேலும், நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்ட தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமெனவும் தமுமுக கேட்டு கொள்கிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP