காரைக்காலில் .... IPP சார்பாக - பெண்கள் இஃப்தார் நிகழ்ச்சி
பெண் ஜனாசா குளிப்பாட்டும் மற்றும் கபனிடும் செயல்முறை விளக்கம் மற்றும்
பெண்கள் இஃப்தார் நிகழ்ச்சி
தமுமுகவின் மார்க்க பிரிவான இஸ்லாமிய பிரச்சார பேரவை (IPP) காரைக்கால் நகரம் சார்பாக பெண் ஜனாசா குளிப்பாட்டும் மற்றும் கபனிடும் செயல்முறை விளக்கமும் மற்றும் பெண்கள் இஃப்தார் நிகழ்ச்சியும் நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு IPP மாவட்ட செயலாளர் ஹாஜா நஜிமுதீன் தலைமை வகித்தார், தமுமுக மாநில செயலாளர் எம்.எஸ்.அலாவுதீன், மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம், மாவட்ட செயலாளர் கமால் ஹுசைன், மமக மாவட்ட செயலாளர் ராஜா முஹம்மது, மாவட்ட பொருளாளர் அப்துல் காசிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மண்ணரை வாழ்க்கை என்ற தலைப்பில் சகோதரி பர்வினும், பெண் ஜனாசா குளிப்பாட்டும் மற்றும் கபனிடும் செயல்முறையும் மற்றும் விளக்கத்தையம் சகோதரி ஷர்மிளா பானுவும் சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் இஃப்தாரும் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை IPP மாவட்ட பொருளாளர் ஷாஹுல் ஹமீது தலைமையில் நிர்வாகிகள் யூசுப்கான், மெய்தீன், சாதிக் அலி, முஹம்மது மாசிம், செய்யது புஹாரி, நஜிமுதீன், சர்புதீன், முஹம்மது யூசுப் என்ற முத்து, சிக்கந்தர், புதுத்துறை யூசுப், அஷ்ரப் அலி, முஹம்மது பைசல், ஹாஜா மெய்தீன், சதாம் ஹுசைன் உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.


