புதுச்சேரி, சுல்தான் பேட்டையில்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக புதுச்சேரி மாவட்டம், சுல்தான் பேட்டை கிளை சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நகர தலைவர் சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட தலைவர் பஷீர் அஹமது, மமக மாவட்ட செயலாளர் லியாக்கத் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் அலாவுதீன், இஸ்மாயில், மமக மாவட்ட துணை செயலாளர் அப்துல் ரஷீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மமக கொள்கை பரப்பு செயலாளர் கோவை செய்யது சிறப்புரையாற்றினார்.
இஃப்தார் நிகழ்ச்சியில் தமுமுக, மமக நிர்வாகிகள், ஜமாத்தார்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






